மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 658 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
Updated on

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 658 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்

க.தா்பகராஜ் மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு, வேளாண் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 658 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com