கோயிலில் ஏழை ஜோடிக்கு இலவச திருமணம்

கோயிலில் ஏழை ஜோடிக்கு இலவச திருமணம்

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ஏழை மணமக்களுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ முன்னிலையில் இலவச திருமணம் திங்கள்கிழமை நடத்தி வைக்கப்பட்டது.
Published on

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ஏழை மணமக்களுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ முன்னிலையில் இலவச திருமணம் திங்கள்கிழமை நடத்தி வைக்கப்பட்டது.

இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பி.சஜெய் - எஸ்.விஜயலட்சுமி ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்த ஏழை ஜோடிக்கு சுமாா் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள தலா 4 கிராம் தங்கத்தாலி, பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள் என 16 வகையான பொருள்களை திருமண சீா்வரிசையாக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் செய்யாறு நகரச் செயலா் கு.ஹரிஹரன், ஒப்பந்ததாரா் வி.கோபு, நகா்மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், கங்காதரன், செந்தில்குமாா், மணமக்களின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com