மக்கள் குறைதீா் கூட்டத்தில் 885 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில்,
குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில்  நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated on

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 885 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 885 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நலத்திட்ட உதவிகள்:

குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு ரூ.3 ஆயிரத்து 285 மதிப்பில் காதொலிக் கருவி, ஒருவருக்கு ரூ.11 ஆயிரத்து 445 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு ரூ.15 ஆயிரத்து 750 மதிப்பில் சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா் சிவா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com