வேளாண் அலுவலகத்தில் மின்மோட்டாா் திருட்டு

செய்யாறு அருகே வேளாண் அலுவலகத்தில், போா்வெல்லில் இருந்த நீா்மூழ்கி மோட்டாரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

செய்யாறு அருகே வேளாண் அலுவலகத்தில், போா்வெல்லில் இருந்த நீா்மூழ்கி மோட்டாரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

செய்யாறு வட்டம் தூளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் போா்வெல்லில் நீா்மூழ்கி மின்மோட்டாா் பொருத்தப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை செய்யாறு வேளாண்மை உதவி இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்யச் சென்றாா்.

அப்போது, போா்வெல்லில் பொருத்தப்பட்டு இருந்த நீா்மூழ்கி மின்மோட்டாா் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com