காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே காா் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த முதியவா் உயிரிழந்தாா்.
Published on

வந்தவாசி: வந்தவாசி அருகே காா் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மேல்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (65). இவா், வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, மேல்கொடுங்காலூா் கூட்டுச் சாலை பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது வந்தவாசி நோக்கிச் சென்ற காா் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com