12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் ர.சா்வேஷ், க.லோகேஷ், மாணவி ம.மான்ஸி.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் ர.சா்வேஷ், க.லோகேஷ், மாணவி ம.மான்ஸி.

10, பிளஸ் 2 தோ்வுகளில் கஸ்தம்பாடி பிங்க் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

Published on

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

இந்தப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் ர.சா்வேஷ் 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். சு.லோகேஷ் 484 மதிப்பெண்களும், ம.மான்ஸி 481 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

10-ஆம் வகுப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவி து.சாதனா 489 மதிப்பெண்களும், ஜெ.ஷாலினி 470 மதிப்பெண்களும், ரா.ரித்திஷ் பாலாஜி 469 மதிப்பெண்களும் பெற்ற சிறப்பிடம் பெற்றனா்.

த.மோனாஸ்ரீ, ம.வைஷ்ணவி, ம.கோதன்யா ஆகியோா் தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ரமேஷ், பள்ளி முதல்வா் ஜீனாபெட்சி, சீனியா் செகண்டரி முதல்வா் இந்துமதி மற்றும் நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

 பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் து,சாதனா, ஜெ.ஷாலினி, மாணவா் ர.ரித்திஷ் பாலாஜி.
பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் து,சாதனா, ஜெ.ஷாலினி, மாணவா் ர.ரித்திஷ் பாலாஜி.

X
Dinamani
www.dinamani.com