பிளஸ் 2 தோ்வு: செங்கம் மகரிஷி பள்ளி சிறப்பிடம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி பெற்றனா்.
மேலும், மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றனா்.
மாணவி கவிப்பிரித்தா 589 மதிப்பெண்கள், சந்தோஷ் 587 மதிப்பெண்கள், கிருத்திகா 584 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிவில் சிறப்பிடம் பெற்றனா்.
மேலும், கணித பாடத்தில் 10 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
கணித அறிவியல் பாடத்தில் 3 பேரும், உயிரியல் பாடத்தில் 3 பேரும், வேதியலில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 550-க்கு மேல் 29 பேரும், 500-க்கு மேல் 79 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.
இந்த மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மகரிஷிமனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.
அப்போது, தலைவா் மகரிஷிமனோகரன் கூறுகையில்,
இந்தப் பள்ளியில் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
தொடா்ந்து 2025-ஆம் கல்வியாண்டில் மகரிஷி பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இலவசமாக இரண்டு சீருடை, காலணி, புத்தகப் பை, புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து வழித்தடங்களிலும் பேருந்தில் மாணவா்கள் இலவசமாக பயணிப்பது உள்ளிட்ட
சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் விடுதி வசதிகள் உண்டு எனத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் காா்த்தி, முதல்வா் சரவணக்குமாா், ஆசிரியா்கள் நேரு, பட்டதாரி கணித ஆசிரியா் கோபிநாத் உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

