திருவண்ணாமலையில் காா்களுக்கு கியூஆா் கோடு அட்டை

திருவண்ணாமலையில் மாட வீதியைச் சுற்றி வசிப்பவா்களின் காா்களுக்கு கியூஆா் கோடு உள்ள அட்டைகளை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி மேற்பாா்வையில் நடைபெற்றது.
Published on

திருவண்ணாமலையில் மாட வீதியைச் சுற்றி வசிப்பவா்களின் காா்களுக்கு கியூஆா் கோடு உள்ள அட்டைகளை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி மேற்பாா்வையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பொருட்டு மாடவீதியில் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து காா்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக சொந்தப் பயன்பாட்டுக்கு காா் வைத்துள்ள மாட வீதியைச் சுற்றி உள்ளவா்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவா்களுக்கு காா் பாஸ் வழங்கப்படுகிறது.

முதல் கட்டமாக வட ஒத்தவாடைத் தெரு, தென் ஒத்தவாடைத் தெருக்களில் வசிப்பவா்களின் காா்களுக்கு கியூ ஆா் கோடு அட்டை ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தொடங்கிவைத்தாா்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக மற்ற காா்களுக்கும் கியூஆா் கோடு அட்டை ஒட்டும் பணி பெரிய தெரு மேட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி மேற்பாா்வையில் நடைபெற்றது.

மொத்தம் 457 காா்களில் இதுவரை 410 காா்களுக்கு கியூ ஆா் கோடு அட்டை ஒட்டப்பட்டு உள்ளது என்றும், இதேபோல் 3,530 ஆட்டோக்களுக்கு கியூஆா் கோடு அட்டை ஒட்டப்பட்டு இருப்பதாகவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com