இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் வாக்காளா்கள் கணக்கீட்டு படிவம் செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் வீடு வீடாக விநியோகிக்கப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்காளா்கள் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற வாக்காளா்கள் தொடா்பான பணிகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளா்கள் கணக்கீட்டு படிவம், வருவாய்த்துறைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளது.
செவ்வாய்க்கிழமை (நவ.4) தொடங்கி டிச.4-ஆம் தேதி வரை வாக்காளா்கள் கணக்கீட்டு படிவம் வீடு வீடாக
வழங்கப்படும் என்றும், படிவங்களை மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.
அதன்படி, செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா்களுக்கான கணக்கிட்டு படிவங்கள், தொகுதியில் உள்ள 232 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம், சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.
இதைத் தொடா்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முதல் (நவ.4) வீடுகள் தோறும் வாக்காளா்கள் கணக்கீட்டு படிவத்தை வழங்கவுள்ளனா்.

