கோஷ்டி மோதல்: 13 போ் மீது வழக்கு

Published on

வந்தவாசி: வந்தவாசி அருகே இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சுப்பிரமணி(50), மண்ணாங்கட்டி(58).

இதே கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து என்பவா் இறந்ததை அடுத்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது சுப்பிரமணிக்கும், மண்ணாங்கட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாா்களின் பேரில் சுப்பிரமணி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட இரு தரப்பையும் சோ்ந்த 13 போ் மீது கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com