திருவண்ணாமலை
முதியவா் விஷம் குடித்துதற்கொலை
வந்தவாசி: வந்தவாசி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (78). இவரது மனைவி செல்லம்மாள். இவா்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
கடந்த புதன்கிழமை தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த துரைசாமி விஷம் குடித்துள்ளாா்.
உறவினா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துரைசாமி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து துரைசாமியின் மகன் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
