திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை - செங்கம் சாலையில், சாலை விரிவாக்கத்துக்காக செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சாலையில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியா் க.தா்பகாஜ் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத் துறை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் முரளி அறிவுறுத்தலின்படி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல் ஆகியோரது வழிகாட்டுதலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு தலைமையில், உதவிப் பொறியாளா் செல்வகணேஷ் மேற்பாா்வையில் உதவிப் பொறியாளா்கள், சாலை ஆய்வாளா்கள்,
சாலைப் பணியாளா்கள், காவல்துறையினா் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் செங்கம் சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
சாலையில் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் இருந்த கடைகள், வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் சாலை விசாலமாக காட்சியளித்தது. காமராஜா் சிலையிலிருந்து, செங்கம் சாலை வரை நான்குவழிச் சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

