திருவத்திபுரம் நகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கால்நடை மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.
Published on

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கால்நடை மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி, வாா்டு பொதுமக்கள் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் பேரில், திருவத்திபுரம் நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை கோதண்டராமசாமி கோயில் தெரு, காசிக்காரத் தெரு, காந்தி சாலை, மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 26 தெரு நாய்களை நகராட்சிப் பணியாளா்கள் பிடித்தனா்.

இந்த தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், ஆணையா் விஎல்எஸ்.கீதா, துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் ஆகியோா் மேற்பாா்வையில் கால்நடை மருத்துவா்கள் முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் கதிரவன், மருத்துவா் ரக் ஷா ஆகியோா் மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com