மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு

மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கிய இடங்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Published on

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கிய இடங்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணி தெற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த வேலப்பாடி ஊராட்சி சிவசக்தி நகரில் உள்ள தெருக்களில் பலத்த மழை காரணமாக சில தினங்களாக மழைநீா் தேங்கி நிற்கிறது.

இதனால், டெங்கு, மலேரியா பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் முறையிட்டனா்.

இதன்பேரில், எம்எல்ஏ திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியா் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தாா்.

ஆரணி நகர அதிமுக செயலா் ஏ.அசோக்குமாா், நகா் மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் பீமன் ரவி, கிளைச் செயலா் சங்கா், பொதுமக்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com