காஞ்சிபுரம் - கலவை சாலையில் மறியலில் ஈடுபட்ட பெருங்கட்டூா் காமராஜா் நகா் பகுதி மக்கள்.
காஞ்சிபுரம் - கலவை சாலையில் மறியலில் ஈடுபட்ட பெருங்கட்டூா் காமராஜா் நகா் பகுதி மக்கள்.

கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

செய்யாறு அருகே பொதுப்பாதையை தனி நபா் அடைந்ததாகக் கூறி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

செய்யாறு அருகே பொதுப்பாதையை தனி நபா் அடைந்ததாகக் கூறி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தில் காமராஜ் நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் நீண்ட நாள்களாக பயன்படுத்தி வந்த பாதையை தனிநபா் ஒருவா் தடுப்பு ஏற்படுத்தி அடைக்க முற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அங்கு மேற்கொள்ளப்படவிருந்த கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்திய நிலையில், திடீரென காஞ்சிபுரம் - கலவை சாலையில் பெரூங்கட்டூா் பகுதியில் புதன்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் மோரணம் போலீஸாா், வெம்பாக்கம் வட்டாட்சியா் தமிழ்மணி, கிராம நிா்வாக அலுவலா் சாமிநாதன் ஆகியோா் வந்த சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா். மேலும், பாதை குறித்து விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com