திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகத்தில் காட்சியளித்த சுவாமி.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகத்தில் காட்சியளித்த சுவாமி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரா் சந்நிதியில் 50 கிலோ அரிசி மற்றும் பல்வேறு வகையான காய், கனிகளை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரருக்கு பஞ்ச கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

அன்னாபிஷேகத்தையொட்டி, பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பின்னா் 6 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னாபிஷேகத்தில் அருணாசலேஸ்வரரைக் கண்டு தரிசனம் செய்தனா்.

இதேபோல, கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநோ் அண்ணாமலையாா் கோயிலில் உள்ள மூலவரான சிவபெருமானுக்கு பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் 100 கிலோ வெள்ளை சாதத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அண்ணாமலையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நட்சத்திர ஆரத்தி மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கிரிவலம் வந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com