வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சம்பத்குமாரிடம் (வலமிருந்து 2-வது) மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சம்பத்குமாரிடம் (வலமிருந்து 2-வது) மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

பழங்குடி இருளா் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு கொடுத்தனா்.
Published on

பழங்குடி இருளா் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு கொடுத்தனா்.

வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூா், சத்யா நகா், மங்கநல்லூா், பொன்னூா், சிவனம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இருளா் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி இந்த மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டாரச் செயலா் அ.அப்துல் காதா் தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினா்கள் காயாசா்அராபத், சுகுணா, கிளைச் செயலா்கள் ந.ராதாகிருஷ்ணன், தேவராஜ், ஏழுமலை மற்றும் இருளா் சமுதாய மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சம்பத்குமாரிடம் மனு அளித்தனா். பின்னா் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இருளா் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து மனு அளித்து வருகிறோம். கடந்த ஆண்டு வங்காரம் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தை காண்பித்து, அந்த இடத்தில் பட்டா வழங்குவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கக் கோரி மீண்டும் மனு அளித்துள்ளோம் என்றனா்.

முன்னதாக, மனு அளிக்க கோட்டை மூலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com