திருவண்ணாமலை
வாக்காளா் படிவம் விநியோகம்: பாஜகவினா் ஆய்வு
ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வழங்கும் பணியை பாஜகவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வழங்கும் பணியை பாஜகவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணியை ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக இணை அமைப்பாளா் சைதை வ.சங்கா் தலைமையிலும் மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலா் ராஜ்குமாா் முன்னிலையிலும் மாவட்ட ஓபிசி பிரிவு துணைத் தலைவா் பேட்டரி சீனிவாசன், ஆரணி நகரத் தலைவா் மாதவன், மெய்யூா் தண்டபாணி, அரையாளம் கிளைத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.