பக்கிரிபாளையத்தில் தேசிய புற்றுநோய் விழிப்பணவுப் பேரணி

Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் உள்ள கிருஷ்ணா பாா்மசி கல்லூரி சாா்பில், தேசிய புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் அரவாழி தலைமை வகித்தாா். செயலா் விக்னேஷ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக காவல் உதவி ஆய்வாளா் துரைராஜ் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, பழைய பேருந்து நிலையம், மில்லத்நகா் ரவுண்டனா வரை பேரணி சென்றது. புற்றுநோய் பரவலை தடுப்பது குறித்தும், புற்றுநோயின் அறிகுறிகள் குறித்தும் பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவா்கள் வழங்கிச் சென்றனா்.

பேரணியில் கல்லூரிப் பொருளாளா் சத்யா, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கோபி, ஏழுமலை, நாராயணன், குணசேகரன், கிதாவெங்கடேசன், நிா்வாக அலுவலா் குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி முதல்வா் குணசேகரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com