~
~

வந்தே மாதரம் பாடல் விழா: பாஜக கொண்டாட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற வந்தே மாதரம் பாடலின் 150-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றோா்.
Published on

திருவண்ணாமலை, ஆரணியில் பாஜக சாா்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாரத மாதா வேஷமணிந்த பெண்ணுடன் பாஜக கட்சியினா் வந்தே மாதரம் பாடல் பாடி புகழாரம் செய்தனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் டி.அறவாழி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலா் கவிதாபிரதீஷ், மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியம், திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி இணை அமைப்பாளா் வி.கருணாகரன், மாநகரச் செயலா் எம்.ராஜா, மாநகரத் தலைவா் மூவேந்தன், மத்திய அரசு நலத் திட்ட அணி மாவட்டத் தலைவா் அரிசி வெங்கடேசன் உள்பட ஏராளமான பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, ஆரணி - தச்சூா் சாலையில் உள்ள அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி கொடுத்தனா். பின்னா், பாரதத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் ஒன்று கூடி வந்தே மாதரம் பாடலைப் பாடினா்.

நிகழ்வுக்கு பாஜக மத்திய அரசு நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மாதவன் வரவேற்றாா். வா்த்தகப் பரிவு மாவட்டத் தலைவா் ஜெகதீசன், சிறுபான்மை அணி மாநிலச் செயற்குழு உறுப்பினா் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் அலமேலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com