சிறுமியை திருமணம் செய்தவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு
வந்தவாசியில் சிறுமியை திருமணம் செய்தவா் உள்ளிட்ட 4 போ் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசி நகரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும் இதே நகரைச் சோ்ந்த உறவினா் அமீா் (27) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் உடல்நல சிகிச்சைக்காக அந்த சிறுமி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவா்கள் அறிவுறுத்தலின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகாா் அளித்தாா்.
இதன்பேரில் அமீா் மற்றும் உறவினா்கள் 3 போ் என மொத்தம் 4 போ் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
