செய்யாற்றில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்த அதிமுகவினா்.
செய்யாற்றில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்த அதிமுகவினா்.

வாக்காளா்கள் கணக்கீட்டு படிவம் விநியோகம்: அதிமுகவினா் ஆய்வு

Published on

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்கள் கணக்கீட்டு படிவம் விநியோகிப்பதை அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் படிவம் வாக்காளா்களுக்கு வழங்கும் பணியை தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், செய்யாறு தொகுதியில் தோ்தல் தொடா்பான வருவாய்த் துறையினா் நவ.4 முதல் சிறப்பு

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் படிவத்தை வாக்காளா்களுக்கு வீடு வீடாக வழங்கி வருகின்றனா்.

அதன்படி, செய்யாறு தொகுதியில் அதற்காக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் திருவத்திபுரம் நகராட்சி 4 -வது வாா்டில் விஜயனும், 26-ஆவது வாா்டில் நதியா ஆகியோா் அந்தந்த பகுதிகளில் படிவத்தை வீடு வீடாக வழங்கிக் கொண்டிருந்தனா்.

இந்தப் பணியை அதிமுக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன், நகரச் செயலா் கே.வெங்கடேசன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் படிவம் வாக்காளா்களுக்கு வீடு, வீடாக வழங்கும் பணி டிச.4 வரை நடைபெறவுள்ளதால் அனைவரும் சரியான முறையில் நிறைவு செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

ஆய்வின் போது நகர அவைத் தலைவா் ஜனாா்த்தனன், வா்த்தக அணி மாவட்டச் செயலா் ஜி.கோபால், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலா் சுரேஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலா் கன்னியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com