ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா் வி.ராமு.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா் வி.ராமு.

வந்தவாசி: அதிமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு ஆலோசனை

Published on

வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா் வி.ராமு, ராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் ஜானகிராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

அப்போது, திமுக ஆட்சியின் குறைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும், அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து

பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை அவா்கள் வழங்கிப் பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் மற்றும் ஒன்றியச் செயலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com