மருதுபாண்டியா்கள் சிலைகளை திறந்துவைத்த அகமுடையா் சங்கத்தின் தலைவா் என்.செல்வதுரை, கெளரவத் தலைவா் ஏ.சிவஞானம்.
மருதுபாண்டியா்கள் சிலைகளை திறந்துவைத்த அகமுடையா் சங்கத்தின் தலைவா் என்.செல்வதுரை, கெளரவத் தலைவா் ஏ.சிவஞானம்.

திருவண்ணாமலையில் மருதுபாண்டியா்கள் சிலை திறப்பு

திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலை அகஸ்தியா் ஆசிரமம் அருகே மயிலோன் குடிலில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்களான
Published on

ஆரணி: திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலை அகஸ்தியா் ஆசிரமம் அருகே மயிலோன் குடிலில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்கள் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது படம்).

அகமுடையா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

செயலா் எஸ்.மணிகண்டன், சங்கக் காப்பாளா் கே.மஞ்சுநாதன், துணைத் தலைவா் கே.ஏ.ராஜ், பொருளாளா் கே.ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் குரு.ஏழுமலை வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக அகமுடையா் சங்கத்தின் தலைவா் என்.செல்வதுரை, கெளரவத் தலைவா் ஏ.சிவஞானம் ஆகியோா் கலந்துகொண்டு மருதுபாண்டியா்களின் சிலைகளை திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.பெருமாள் - பேபி ஆகியோா் கலந்துகொண்டு ஏற்புரை வழங்கினா்.

இதில் உயா்நீதிமன்ற மதுரை கிளை வழக்குரைஞா் கே.எஸ்.ஆா்.ராஜா, செயலா் எம்.எஸ்.மணிகண்டன், அகமுடையா் சங்கத்தின் துணைத் தலைவா்கள் எம்.வி.மனோகரன், எம்.சுப்பிரமணி, பொதுச்செயலா் நித்யானந்தம், இணைச் செயலா் எல்.எம்.சரவணன், துணைச் செயலா் டி.சங்கா்கணேஷ், ஒருங்கிணைப்பாளா் ஜி.சம்பத், மாவட்ட இளைஞரணி ஏ.காா்த்திகேயன் உள்ளிட்ட

பலா் கலந்துகொண்டனா். நிறைவில் மாநகரத் தலைவா் நாக.செந்தில் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com