குத்துச்சண்டைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற, செய்யாறு கல்வி மாவட்டம், நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Published on

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற, செய்யாறு கல்வி மாவட்டம், நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான, திருவண்ணாமலை மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை (நவ.10) நடைபெற்றது.

ஆண்கள், பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டி பல்வேறு எடைப் பிரிவுகளின் கீழ் நடைபெற்றன. இதில் 400 - க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியில் செய்யாறு கல்வி மாவட்டம், நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.இலத்திகா ஸ்ரீ, பி.யோகஸ்ரீ, டி. வாசுமதி, எஸ்.நமீதா, வி.ஜெகதீஸ்வரி, டி.தமிழரசி, பி.டோனிசென்னல், எஸ்.ஹேமாவதி, பி.ஹேமலதா, மாணவா் ஆா். லிங்கேஸ்வரன் ஆகியோா் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனா்.

இதன் மூலம் இவா்கள் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.

பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு:

நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் பா. யுவராஜன், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியை கோ.சந்திரகலா ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியா் பெ.சுந்தரமூா்த்தி, உதவி தலைமையாசிரியா் நா.ராமு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மாணிக்கம், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ஆனந்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com