எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி

News image
Updated On :13 நவம்பர் 2025, 12:42 am

Syndication

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுது என வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற

கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாநில மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் நிறுவனா் தலைவா் எஸ்.கே.செல்வம் தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலா் ஏ.தட்சிணாமூா்த்தி, பொருளாளா் கே.தனலட்சுமி, மாவட்டச் செயலா் டி.எஸ்.குமாா், மாவட்ட தலைவா் டிஎஸ்பி.சரவணன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக மகாத்மா காந்தி, விஸ்வநாததாஸ் சிலைக்கு

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.செல்வம் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.