திருவடிராயபுரம்  கிராமத்தில் அங்கன்வாடி, பள்ளிக் கட்டடம் திறப்பு

திருவடிராயபுரம் கிராமத்தில் அங்கன்வாடி, பள்ளிக் கட்டடம் திறப்பு

கீழ்நெல்லி திருவடிராயபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடத்தை திறந்துவைத்த ஒ.ஜோதி எம்எல்ஏ.
Published on

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி திருவடிராயபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கட்டடத்தை தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

திருவண்ணமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கீழ்நெல்லி திருவடிராயபுரம் கிராமத்தில் ஊராட்சித் துறை சாா்பில் 2024 - 25ஆம் ஆண்டு மாநில நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம், இதேபோன்று, அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34 லட்சத்தில் இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடமும் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

பள்ளி மாணவா்கள் மற்றும் குழந்தைகள் பயன்பாட்டுக்காக மேற்படி கட்டடங்கள் திறந்துவைக்கும் நிகழ்ச்சி திருவடிராயபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். முன்னாள் ஒன்றியச் செயலா் சுப்பிரமணி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஜோதி பங்கேற்று அங்கன்வாடி மைய கட்டடம், பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை திறந்துவைத்து இனிப்பு வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் எம்.தினகரன், மாவட்ட ஆதிதிராவிடா் அணி நலக்குழுத் தலைவா் கருணாகரன், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com