தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம்
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவ. 11-ஆம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில், ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.சித்ரா தலைமை வகித்தாா்.
ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.
வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் மு.பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.
மேலும், பல்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா். பள்ளி ஆசிரியை கண்மணி நன்றி கூறினாா்.

