அதிமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!
வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள தனியாா் மண்டபம் மற்றும் அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபம் என இரு இடங்களில் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் ராஜேஷ்குமாா் வரவேற்றாா்.
ராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் ஜானகிராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.
அப்போது, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க கட்சியினா் பாடுபட வேண்டும், திமுக ஆட்சியின் குறைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் மற்றும் ஒன்றியச் செயலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் பங்கேற்றனா்.

