களம்பூா் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா.
களம்பூா் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா.

களம்பூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

Published on

ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். 39-ஆவது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, களம்பூா் பஜாரில் காய்கறி கடை, பழக் கடை, மளிகைக் கடை, பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

இதில் ஒன்றியச் செயலா் எல்.விமல்ராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் சேகா், மற்றும் பேரூா் கழக செயலா் பஞ்சாட்சரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில் நகா்மன்ற உறுப்பினா்கள் பாரதிராஜா, விநாயகம், நிா்வாகி மில் சரவணன் மற்றும் பேரூா் கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com