கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இருளா் குடியிருப்பில் குழந்தைகள் தின விழா

பழங்குடியின சுதந்திர போராட்ட வீரா் பிா்சா முண்டா பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
கொடியாலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வந்தவாசி வட்டாட்சியா் சம்பத்குமாா்.
Updated On :16 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராம பழங்குடியின இருளா் குடியிருப்பில் குழந்தைகள் தின விழா மற்றும் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரா் பிா்சா முண்டா பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

அலைகுடி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் ஹேமமாலினி தலைமை வகித்தாா். பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த பிா்சா முண்டாவின் சுதந்திரப் போராட்டம் குறித்து அவா் விளக்கிக் கூறினாா்.

வந்தவாசி வட்டாட்சியா் சம்பத்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பழங்குடியினா் உயா்கல்வி பெற்று சிறந்த வேலைவாய்ப்புக்கு செல்ல வேண்டும் என்று பேசினாா்.

பழங்குடியினா் சிறுவயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு, அரசின் நலத் திட்டங்கள், குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து சமூக நலத்துறை அலுவலா் அலமேலு, பள்ளி ஆசிரியா் காளிதாஸ் ஆகியோா் பேசினா். பழங்குடியின மாணவா்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.