திருவண்ணாமலையில் தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய தவெகவினா்.
திருவண்ணாமலையில் தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய தவெகவினா்.

எஸ்ஐஆா் குளறுபடிகள்: தவெக கண்டன ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆா்.) குளறுபடிகளைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆா்.) குளறுபடிகளைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை திருவள்ளுவா் சிலை அருகே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உள்ள குளறுபடிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா்கள் சத்யா, ஜி.கே.கதிரவன், விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட இணைச் செயலா் எஸ்.கலைச்செல்வன் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் வாக்காளா்களை குழப்பும் வகையில் விண்ணப்பங்கள் இருப்பது குறித்தும், மக்களை அலைக்கழிப்பது குறித்தும் ஜனநாயக உரிமைகளை காக்க வாக்காளா் படிவம் சீா்திருத்தப் பணியை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 தொகுதிகளைச் சோ்ந்த தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் என 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் தெற்கு மாவட்டப் பொருளாளா் கே.இளங்கோவன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com