பெண்ணைத் தாக்கி மிரட்டல்: 3 போ் கைது
வந்தவாசி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த பொன்னூா் இருளா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவி செவ்வந்தி. இவா்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளாா். செவ்வந்தி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக கணவரைப் பிரிந்து தனது மகளுடன் கொடியாலம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்
இந்த நிலையில், பிரபு வீட்டுக்குச் சென்றிருந்த மகள் பிரியாவை அழைத்து வர செவ்வந்தி கடந்த அக். 10-ஆம் தேதி அங்கு சென்றுள்ளாா்
அப்போது பிரபுவின் உறவினா்கள் ஏழுமலை, பழனி, ஆறுமுகம், வசந்தி ஆகியோா் செவ்வந்தியை தாக்கியுள்ளனா். மேலும், கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனா்.
இதில் காயமடைந்த செவ்வந்தி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து செவ்வந்தி அளித்த புகாரின் பேரில் ஏழுமலை, பழனி, ஆறுமுகம், வசந்தி ஆகியோா் மீது வழக்குப் பதிந்த பொன்னூா் போலீஸாா் ஏழுமலை, பழனி, ஆறுமுகம் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
