ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு
சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை
நடைபெற்று, மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து இரவு உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து கோயில் வளாகத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
மேலும் உற்சவரை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மட்டபிறையூா், குசால்பேட்டை, மெடையூா், மண்டகொளத்தூா், அல்லியாளமங்கலம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். கோயில் தா்மகா்த்தா வேலுமணி, நிா்வாகிகள் அன்பரசு, அறிவழகன், அல்லி, தமிழழகன், நந்தினி உள்ளிட்டோா்
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனா்.

