திருவண்ணாமலை
ஏரியில் மூதாட்டி சடலம்
வந்தவாசியில் ஏரியில் மூதாட்டி சடலமாக கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியில் ஏரியில் மூதாட்டி சடலமாக கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள பயணியா் விடுதி எதிரில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு புதன்கிழமை மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்து கிடந்தவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து தெரியவில்லை.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அா்ஜுனன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
