ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ.37 ஆயிரமும், 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு நபா் ஒருவருக்கு ரூ.60 ஆயிரமும், நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 01.11.2025-க்குப் பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்து மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம்.
மேலும் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
