வந்தவாசி அருகே தாயைத் தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த ஊத்துக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மனைவி ரங்கநாயகி (58). இவரது மகன் சிவானந்தம் (39). திருமணமாகி இதே கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இருவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ரங்கநாயகி வீட்டிலிருந்து வெளியே வந்த போது அவரை சிவானந்தம் செங்கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த ரங்கநாயகி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ரங்கநாயகி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சிவானந்தத்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
