ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை
ஆரணி: ஆரணி சைதாப்பேட்டையில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
ஆரணி சைதாப்பேட்டை, 16-ஆவது வாா்டு பாலாஜி நகரில் நியாயவிலைக் கடை இல்லாததால் அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் நியாயவிலைக் கடை வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதன் பேரில், சட்டப்பேரவைத் தொகுதி 2025-2026ஆம் ஆண்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.
மேலும், இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றதில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், அதிமுக ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, நகரத் தலைவா் ஜோதிலிங்கம், தகவல் தொழில்நுட்ப மண்டல பொருளாளா் எஸ்.பி.சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் நடராஜன், குமரன், எஸ்.கே.வெங்கடேசன், பாரதிராஜா, சுதா குமாா், விநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

