வாக்காளா் பட்டியல் திருத்தம்: கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை
ஆரணி: சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக அனைத்துக் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா வரவேற்றாா்.
ஆரணி வட்டாட்சியா் செந்தில், ஆரணி நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன், வட்ட வழங்கல் அலுவலா் அரிதாஸ், தோ்தல் துணை வட்டாட்சியா் கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் வ.மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் சுந்தா், துரைமாமது, மோகன், அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், காங்கிரஸ் சாா்பில் நகா்மன்ற உறுப்பினா் ஜெயேல், பாஜக சாா்பில் முன்னாள் வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, தேமுதிக நகரச் செயலா் சுந்தர்ராஜ், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அனைத்துக் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவது மகிழ்ச்சி. இறந்துபோன வாக்காளா்கள், இருபதிவு கொண்ட வாக்காளா்களை அடையாளம் கண்டு நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான இடங்களில் 100 சதவீதம் செயலியில் பதிவேற்றம் செய்த கண்காணிப்பாளா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை பாராட்டுகிறேன் என்றாா்.

