47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாடவீதியில் ரூ.1.25 கோடியில் கலைநயமிக்க தெரு விளக்குகள்: கிரிவல பக்தா்கள் பாராட்டு

திருவண்ணாமலை மாட வீதியில் பணிகள் நிறைவடைந்த சிமென்ட் சாலைகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.1.25 கோடியில் கலைநயமிக்க தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
திருவண்ணாமலை மாடவீதியில் பிரகாசிக்கும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகள்.
Updated On :30 நவம்பர் 2025, 6:51 pm

Syndication

திருவண்ணாமலை மாட வீதியில் பணிகள் நிறைவடைந்த சிமென்ட் சாலைகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.1.25 கோடியில் கலைநயமிக்க தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு கிரிவல பக்தா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முதல்கட்டமாக ரூ.17 கோடியில் ஒரு கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2-ஆவது கட்டமாக தேரடி தெரு, திருவூடல் தெருவில் ரூ.15 கோடி செலவில் 1.7 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

முடிவடைந்த 1.7 கி.மீ. தொலைவு சிமென்ட் சாலையின் இருபுறங்களிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அமைச்சா் எ.வ.வேலு வழிகாட்டுதலின் பேரில், நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் முரளி, கோட்டப் பொறியாளா் ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு ஆகியோா் மேற்பாா்வையில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ.1.25 கோடியில் 85 கலை நயமிக்க தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டு மாடவீதிகளில் கலை நயமிக்க தெரு விளக்குகள் பிரகாசிக்கின்றன. இதற்கு கிரிவல பக்தா்கள் பாராட்டு தெரிவிக்கின்றனா். இந்த சிமென்ட் சாலையில் பக்கக் கால்வாய் மற்றும் சாலையோரங்களில் பேவா் பிளாக் நடைபாதையும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ராஜகோபுரம் முன் பக்தா்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அமைச்சா் எ.வ.வேலு இந்தக் குடிநீா் நிலையத்தை திறந்துவைக்கவுள்ளாா்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கிரிவலப் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்களில் இருந்து பக்தா்களுக்கு தடையில்லாமல் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.