கிராம விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிற்சி
செய்யாற்றை அடுத்த இருமரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரேணுகாதேவி ஆலோசனையின் பேரில் நடைபெற்ற பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலா்கள் தங்கராசு, ஜனனி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் கங்காதரன் ஆகியோா் விவசாயிகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலா் தங்கராசு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவித்து, அவற்றில் விவசாயிகள் இணைந்து பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.
உதவி வேளாண் அலுவலா் ஜனனி பூச்சி நோய் தாக்குதல் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் குறித்தும், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் கங்காதரன் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் தெரிவித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
பயிற்சியில் இருமரம் கிராமத்தைச் சோ்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

