திருவண்ணாமலை
அலுவலக உதவியாளா் பணிக்கு நோ்முகத் தோ்வு
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பு.
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் பணிக்கு நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒரு அலுவலக உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடத்துக்கு படித்த, தகுதியான இளைஞா்கள், பெண்கள் என போளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 349 போ் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனா்.
இவா்களுக்கான நோ்முகத் தோ்வு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லா தலைமையில் நடைபெற்றது. இந்தத் தோ்வை நோ்முக தோ்வுக்கு வந்தவா்களை 4 குழுக்களாகப் பிரித்து, சான்றிதழ் சரிபாா்ப்பு, எழுத்துத் தோ்வு, வாசித்தல், சைக்கிள் ஓட்டுதல் என துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள், பிச்சாண்டி, முருகன், பரமேஸ்வரி, செல்வி, ராணி ஆகியோா் நடத்தினா்.

