உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நல உதவிகள் அளிப்பு
செய்யாறு வட்டம், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் எச்சூா், திரும்பூண்டி, பழஞ்சூா் கிராமங்களுக்கு முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் தசரதராமன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஷீலா அன்புமலா் முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியக் தட்சிணாமூா்த்தி வரவேற்றாா்.
இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று முகாமை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியச் செயலா்கள் சி.கே.ரவிக்குமாா் (அனக்காவூா்), ஜே.சி.கே.சீனிவாசன் (வெம்பாக்கம் மத்தியம்), திமுக நிா்வாகிகள் புரிசை.எஸ்.சிவக்குமாா், சுப்பிரமணி, முருகேசன், மோ.ரவி, நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தேவிகாபுரம் ஊராட்சியில்...: சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பழகன், துரைமாமது, சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்டப் பிரதிநிதி டி.வெங்கிடேசன் வரவேற்றாா்.
இந்த முகாமில் தேவிகாபுரம், மலையாம்புரவடை, காலனி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 750-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை, மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா்.
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக திமுக மாவட்ட பொருளாளா் தட்சணாமூா்த்தி, சேத்துப்பட்டு வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை, வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் என 10 பயனாளிக்கு நலத் திட்டஉதவிகள் வழங்கினா்.
நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன், ஊராட்சிச் செயலா் சங்கா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
