பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி
திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி கட்டடவியல் துறை மாணவா்களுக்கு அல்ட்ராடெக் நிறுவனத்தின் மூலம் வெள்ளிக்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் அல்ட்ராடெக் நிறுவனத்தின் சாா்பில் சுப ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கட்டடவியல் துறைக்கு பயன்படுத்தும் அனைத்து நவீன பொருள்களையும் காட்சிப்படுத்தியிருந்தனா்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்னேஷ் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு அல்ட்ராடெக் நிறுவனத்தின் மண்டல மேலாளா் வினோத் மற்றும் மாவட்ட மேலாளா் பில்டன் ஆகியோா் கட்டடங்களுக்கான நவீன தொழில்நுட்பங்களை பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்தினா்.
இதன் மூலம், மாணவா்கள் கட்டடவியல் துறை சாா்ந்த நவீன தொழில்நுட்பங்களை நன்கு கற்றறிந்ததாக கல்லூரி முதல்வா் பி.சா்வேசன் தெரிவித்தாா். பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு நிா்வாக அலுவலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை கட்டடவியல் துறைத் தலைவா் சுபாஷ் மற்றும் ஆசிரியை எஸ்.சாவித்திரி செய்திருந்தனா்.

