விதைப்பண்ணை வயல்களில் ஆய்வு
மேற்கு ஆரணி வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள விதைப்பண்ணை வயல்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் மாரியப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேற்கு ஆரணி வட்டாரத்துக்குள்பட்ட கண்ணமங்கலம், 5 புத்தூா், வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 10 விதைப்பண்ணை வயல்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநில அரசுத் திட்டம்) மாரியப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அவா் விவசாயிகளிடம் கூறியது:
விதைப்பண்ணை வயல்களில் களைகளை நீக்குதல் மற்றும் மகசூல் அதிகரிக்க பூக்கும் பருவத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பயறு ஒண்டா் 2 கிலோ வீதம் ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம் அல்லது டிஏபி 2 சதவீத கரைசலை தெளிக்கலாம். இதனால், 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.
ஆய்வின்போது, போளூா் விதைச்சான்று அலுவலா் சதீஷ்குமாா், மேற்கு ஆரணி வட்டார உதவி விதை அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

