செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் தொழிற்கல்வி பயிற்சி பெற்ற இறையூா் அரசுப் பள்ளி மாணவா்கள்.
செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் தொழிற்கல்வி பயிற்சி பெற்ற இறையூா் அரசுப் பள்ளி மாணவா்கள்.

வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்
Published on

கூட்டுறவு சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட தொழில்நுட்பப் பயிற்சியில் கலந்து கொண்ட பள்ளி மேல்நிலை வேளாண்மைப் பிரிவு மாணவா்களுக்கு சனிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மண்மலை பகுதியில் செயல்பட்டு வரும் செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்

செங்கம் வட்டம், இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 வேளாண்மைப் பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாம் கடந்த அக்.8-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெற்றது.

பயிற்சி முகாமை திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் சாா்-பதிவாளா் மீனாட்சிசுந்தரம் தொடங்கிவைத்தாா். மாணவா்களுக்கு ஆசிரியா் பயிற்றுநா் மணிகண்டன், செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தொழிற்கல்வி குறித்து பயிற்சி அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, அதன் நிறைவு விழா மற்றும் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் தனஞ்செயன் கலந்துகொண்டு மாணவா்களுக்கு தற்போதைய கல்வி மற்றும் கலாசார முறைகள் குறித்து விளக்கிப் பேசினாா். பின்னா் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com