ஆரணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா
ஆரணி நகரம், ஆரணிபாளையம் பகுதியில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு சூரசம்ஹார திருவிழா நடைபெற்றது .
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவையொட்டி, சூரசம்ஹார விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு கடந்த அக்.22-ஆம் தேதி ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, 6 நாள்கள் தினந்தோறும் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன.
தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு கோயில் வளாகத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதில் முருகப்பெருமான் பத்மாசூரனை வதம் செய்து, பின்னா் வேலுக்கு பால் மற்றும் புனிதநீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபாடு செய்தனா்.
