திருவண்ணாமலை
மது போதையில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மது போதையில் தவறி விழுந்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மது போதையில் தவறி விழுந்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.
செய்யாறு கொடநகா் குழந்தை ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (64). விவசாயத் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை செய்யாறு புறவழிச் சாலையில் மது போதையில் இருந்தபோது, அங்கிருந்த சிறு பாலத்தின் (வாராவதி) மேல் படுத்து தூங்கியதாகத் தெரிகிறது.
போதை மயக்கத்தில் தவறி அருகே இருந்த கால்வாயில் விழுந்துள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே ஞானசேகரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
