உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 415 மனுக்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 415 மனுக்கள்

Published on

செய்யாற்றை அடுத்த தூசி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் 415 மனுக்கள் அளிக்கப்பட்டன.

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அப்துல்லாபுரம், தூசி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தூசி கிராமத்தில் நடைபெற்றது.

வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா். வெம்பாக்கம் வட்டாட்சியா் தமிழ்மணி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், சாதனைகளை குறிப்பிட்டுப் பேசினாா்.

முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 72 மனுக்களும், மகளிா் உரிமைத்தொகை கோரி 259 மனுக்களும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 33 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 14 மனுக்கள் உள்பட 415 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.

முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் டி.ராஜி, வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய திமுக செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், வி.ஏ.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு, ஒன்றிய அவைத் தலைவா் ராதாகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி, வருவாய்த் துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com