திருவண்ணாமலை
இஞ்சிமேடு சிவாலயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை சிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா்.
இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோயில் அடிவாரத்தில் சங்கர நேத்ராலயா, திருமணிச்சேறை உடையாா் அறக்கட்டளை, அருவி அறக்கட்டளை, திவ்யா ஆஃப்டிகல்ஸ் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
முகாமை இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோயில் நிறுவனா் சிவயோகி பெருமாள் சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா்.
முகாமில் இஞ்சிமேடு, ஆவணியாபுரம், அல்லியந்தல், நாராயணமங்கலம், கட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனா்.
சிகிச்சைக்காக வந்தவா்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள், மருந்துகள் வழங்கப்பட்டன.

